சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு லட்சுமணன் ( 53) என்பவர் நடந்து செல்லும் போது திடீரென்று இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு கொள்ளையர்கள் அவரிடமிருந்த செல்போனை பறித்து விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது லட்சுமணன் அவர்களை பிடிக்க முயன்ற போது பின்புறம் அமர்ந்திருந்த கொள்ளையர் ஒருவர் அவரை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அதில், பலத்த காயமடைந்த லட்சுமணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
முன்னதாக அதே இடத்தில், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு லட்சுமி (17) என்ற பெண் தந்தையோடு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் இரண்டு சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.