சென்னை: நேப்பியர் பாலம் கூவம் ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடி வருவதாக இன்று (ஆக. 11) அதிகாலை அண்ணா சதுக்கம் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உதவி ஆய்வாளர் குமார், முதல் நிலை காவலர் சின்னசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீண்ட நேரமாக கூவம் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த இளைஞரை கயிறு மூலமாக மீட்டனர்.
இளைஞரை மீட்டு முதலுதவி
தொடர்ந்து அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில், பெரியமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்தி (30) என்பது தெரியவந்தது. நேற்று (ஆக 10) நேப்பியர் பாலத்தில் நின்று செல்பி எடுத்து கொண்டிருந்தபோது, திடீரென தவறி கூவம் ஆற்றில் விழுந்ததாக தெரிவித்தார்.
செல்ஃபி எடுக்கும்போது கூவம் ஆற்றில் விழுந்த இளைஞர் அந்த இளைஞர் இரவு முழுவதும் காப்பாற்றுமாறு சத்தம் போட்டதாகவும், பயத்தில் ஒரே இடத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு காவலர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
கூவம் ஆற்றில் 8 மணி நேரமாக உயிருக்கு போராடிய இளைஞரை உயிருடன் மீட்ட காவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'திருமணம் செய்வதாக கூறி மோசடி - வலையில் சிக்கிய பெண்'