தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குவைத்தில் சிக்கித்தவித்த பெண்: 5 நாட்களில் மீட்ட தமிழ்நாடு போலீசாருக்கு குவியும் பாராட்டு! - வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு

வெளிநாட்டில் கொத்தடிமையாக சிக்கித்தவித்த பெண் மீட்கப்பட்டது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், "வெளிநாட்டிற்கு செல்வோர், வெளிநாட்டில் வேலைக்கான பணி விசா பெற்று செல்லவேண்டும் என்றும் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி செல்லவேண்டாம்" என்று தாம்பரம் காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையர் ரவி
தாம்பரம் காவல் ஆணையர் ரவி

By

Published : May 3, 2022, 10:04 PM IST

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம், லட்சுமண் நகரைச் சேர்ந்தவர் வனஜா(58). இவரது மகள் மஞ்சுளா(38). இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் 16 ஆண்டுகளுக்கு முன்பாக மஞ்சுளாவை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்.

இது நாள் வரை தாயின் பராமரிப்பிலிருந்து வந்த நிலையில், குடும்ப வறுமையின் காரணமாக வெளிநாட்டில் வேலைக்குச்செல்ல முடிவெடுத்து திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தைச் சேர்ந்த பாஷா என்ற டிராவல் ஏஜென்சி மூலம் குவைத் நாட்டிற்கு வேலைக்காக ரூ.60,000 பணம் கொடுத்துக் கடந்த மார்ச் 17ஆம் தேதி சென்றுள்ளார்.

வெளிநாட்டில் அடிமையாக நடத்தப்பட்டவர்; நுண்ணறிவுப் பிரிவில் மீட்கப் புகார்:இந்த நிலையில்,குவைத் நாட்டிற்கு வேலைக்காகச் சென்றவர் தான் இங்கு விற்கப்பட்டு மிகவும் கஷ்டப்படுவதாக, அவரது அம்மாவிடம் வாட்ஸ்அப் மூலம் வீடியோ பதிவு செய்து அனுப்பியுள்ளார்.

இது குறித்து பல்லாவரம் நுண்ணறிவுப் பிரிவு தலைமை காவலர் டோமினிக் ராஜிடம் ஏப்.26ஆம் தேதி தெரிவித்துள்ளனர். அதன் மூலம் அவர்கள் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

தாம்பரம் காவல் ஆணையர் ரவி பேட்டி
குவைத்தில் மீட்கப்பட்டடார்; காவல் துறை எச்சரிக்கை: அதன்பேரில் பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலையைச் சேர்ந்த ஏஜென்ட் பாஷா(31), சர்தார்(50) ஆகியோரை 28ஆம் தேதி பிடித்து வந்து விசாரணை செய்து, குவைத்தில் சிக்கியுள்ள மஞ்சுளாவை மீட்டு தமிழ்நாடு வர ஏற்பாடு செய்தனர்.
இன்று (மே 03) இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி பேசுகையில், 'வெளிநாடுகளில் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற மோகத்தில் நிறைய பெண்களை வேலைக்கு அனுப்புகிறார்கள். விசாரிக்காமல் யாரும் செல்ல வேண்டாம்; கண்ணீர் மல்க தாய் ஒருவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் தாம்பரம் ஆணையரக போலீசார் உடனடியாக மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.

கொத்தடிமையாக நடத்தினர்:மீட்கப்பட்ட பெண் கூறுகையில், 'கொத்தடிமை போல் நடத்தினர்; உணவு வழங்காமல், அடிக்க முயன்றதாவும், இதனால் தனது அம்மாவைத் தொடர்பு கொண்டு கூறியதால், அவர் மூலம் போலீசாரின் உதவியோடு 5 நாட்களில் தாயகம் திரும்பியதாகவும் கூறினார். இல்லையென்றால், பிள்ளைக் குட்டிகளைக் கூடப் பார்த்து இருக்க முடியாது' எனக் கண்ணீர் மல்கப் பேசினார்

குவைத்தில் இருந்தவரை மீட்ட போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்: காவல் ஆணையர் ரவி, ’ வெளிநாட்டிற்கு செல்வோர், வெளிநாட்டில் வேலைக்கான பணி விசா பெற்று செல்லவேண்டும் என்றும் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி செல்லவேண்டாம்.

இது போன்ற பிரச்னைகளுக்கு Protector of Emigration (இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள Protector General of Emigrants-PGE என்பது வெளிநாடு செல்லும் இந்தியத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்புகளைக் கொண்ட அரசு அமைப்பு) அவர்களுக்கு எழுத உள்ளதாகவும், தனியாக ஒரு பெண்ணை அனுப்பும்போது, சரியான முறையில் விசாரித்துத் தான் அனுப்ப வேண்டும்; அரசுக்கு விவரங்களை அனுப்பி சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்புவதன் மூலம் இது போன்ற சிக்கல்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வை காணலாம்' என்றார்.

குவைத்தில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டு பெண்ணை தகவல் கிடைத்த 5 நாட்களில் மீட்டு தமிழ்நாடு கொண்டு வந்த பல்லாவரம் நுண்ணறிவுப்பிரிவு போலீசார் டோமினிக் ராஜ், உதவி ஆணையர் ஆரோக்கிய ரவீந்திரன், ஆய்வாளர் தயாள் ஆகியோரை தாம்பரம் காவல் ஆணையர் ரவி பாராட்டினார்.

இதையும் படிங்க: காவல் துறையினர் எதுக்கு இருக்கீங்க? - விளாசிய ஆணையர் ரவி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details