தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு பட்ஜெட்: பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு - DMK government budget

நடப்பு நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு 32,599 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு நிதி
தமிழ்நாடு பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு நிதி

By

Published : Aug 13, 2021, 12:56 PM IST

Updated : Aug 13, 2021, 1:45 PM IST

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இன்று (ஆக.13) முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு

நிதி நிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "பள்ளிக் கல்வித் துறைக்கு 32,599.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு தனித்துவமான கல்விக்கொள்கை உருவாக்கப்படும்.

தமிழ்நாடு பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு நிதி

865 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 20 கோடி ரூபாயில் ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும். அடிப்படைக் கல்வி அறிவு, கணித அறிவு ஆகியவற்றை உறுதி செய்ய 'எண்ணும் எழுத்தும் இயக்கம்' 66.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்க மாதிரிப் பள்ளிகள் செயல்படுத்தப்படும். கரோனா காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைக் குறைப்பதே அரசின் முதல் நடவடிக்கை" எனத் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு

இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட் : எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுக்கு ரூ. 3 கோடி

Last Updated : Aug 13, 2021, 1:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details