தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை மாநகர பேருந்து மீது மரம் விழுந்ததால் பரபரப்பு - government bus

சென்னையில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர பேருந்து மீது மரம் விழுந்ததால் பரபரப்பு
சென்னை மாநகர பேருந்து மீது மரம் விழுந்ததால் பரபரப்பு

By

Published : Jul 19, 2022, 4:54 PM IST

சென்னை: திருவொற்றியூர் முதல் கோயம்பேடு வரை செல்லக்கூடிய 159a மாநகர பேருந்தானது, பேசின் பிரிட்ஜ் மின்சார வாரிய அலுவலகம் வழியாக இன்று பகல் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பழைய அரசு மரம் ஒன்று முறிந்து மாநகர பேருந்து மீது விழுந்தது. இதில் பேருந்தின் பின் பக்கம் கண்ணாடி உடைந்தது.

சென்னை மாநகர பேருந்து மீது மரம் விழுந்து விபத்து

அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயமில்லை. மேலும் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசின் பிரிட்ஜ் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மரத்தை அப்புறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பேருந்துகளை சாலையிலேயே நிறுத்தி விட்டு ஓட்டுநர்கள் வாக்குவாதம்

ABOUT THE AUTHOR

...view details