தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுமிக்கு கணக்கு பாடம் சொல்லித் தரும் போக்குவரத்து காவலர்! - சென்னை அப்டேட்

சென்னையில் சாலையோரத்தில் வசித்து அரசுப் பள்ளியில் பயின்று வரும் சிறுமிக்கு போக்குவரத்து காவலர் ஆசிரியராக மாறி பாடமெடுத்து வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

போக்குவரத்து காவலர்
போக்குவரத்து காவலர்

By

Published : Jan 12, 2022, 7:53 AM IST

சென்னை:கடந்த இரு ஆண்டுகளாக கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

தற்போது கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிகரிப்பின் காரணமாக மீண்டும் 8ஆம் வகுப்பு வரை வகுப்புகள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை பிராட்வேயில் சாலையோரத்தில் வசித்து அரசுப் பள்ளியில் பயின்று வரும் தீபிகா என்ற சிறுமியின், கணக்கு பாட சந்தேகங்களை போக்குவரத்துக் காவலர் மகேந்திரா தீர்த்து வைத்து வருகிறார்.

போக்குவரத்து காவலர் மகேந்திரா, சிறுமிக்கு பாடம் நடத்தும் வீடியோ

கணக்கு வாத்தியாரான காவலர்

கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறுமிக்கு போக்குவரத்து காவலர் மகேந்திரா ஆசிரியராக மாறி, அவரின் சந்தேகங்களை தீர்த்து வருகிறார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிறுமி தனது கணக்குப் பாடத்திலுள்ள சந்தேகங்களைக் காவலரிடம் கேட்க, அவர் சிறுமியின் கணக்குப் பாடத்தில் எழுந்த சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறார்.

காவலர்களாக இருப்பவர்கள் கையில் தடி எடுப்பதை மட்டும் தான் கண்டு இருப்போம். இந்தக் காவலரோ கணக்கு வாத்தியாராக மாறி, சிறுமிக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டி: தமிழ்நாடு வீராங்கனை அபிராமி அஜித் பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details