தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரவில் தனியாக செல்போன் பேசுபவர்களை குறி வைத்து வழிப்பறி... - Chennai

சென்னையில் இரவில் தனியாக செல்போன் பேசுபவர்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 14, 2022, 11:24 AM IST

சென்னை: சென்னை கேகே நகர் குடியிருப்பில் வசித்து வரும் சிவக்குமார் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், நேற்று(செப்.13) இரவு தனது வீட்டின் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் அதி வேகமாக வந்த மர்ம நபர் ஒருவர் சிவகுமாரை தாக்கி செல்போனை பறித்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து, சிவக்குமார் கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற பழைய குற்றவாளியை கைது செய்து அவனிடம் இருந்து மூன்று செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், இவர் இரவில் தனியாக செல்போனில் பேசிக் கொண்டு இருக்கும் நபர்களை குறி வைத்து, அவர்களை தாக்கி செல்போனை பறித்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஜோடோ யாத்ரா..! குஜராத் மற்றும் உ.பி.யை தவிர்த்து கேரளாவில் 18 நாட்களை காங்கிரஸ் செலவிடுவது ஏன்? - கேரள சிபிஎம் செயலாளர்

ABOUT THE AUTHOR

...view details