சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் மணலூர்பேட்டையை சேர்ந்த செல்வம். இவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு பிரஸ் பயன்படுத்தாமல் வெறும் "தையல் மிஷினாலேயே" அப்துல்கலாம் உருவத்தை வரைந்தார்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றியவர். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அப்துல் கலாம் பெரும் தூண்டுகோளாக விளங்கியவர். விஞ்ஞானி முதல் குடியரசு தலைவர் வரை நாட்டின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணி இன்றியமையாது. 1998 ஆம் ஆண்டில் போக்ரான் அணுசக்தி சோதனையில் பங்கு வகித்ததன் மூலம் இந்தியாவின் "ஏவுகணை நாயகன்" பட்டத்தை பெற்றார்.