சென்னை:இங்கிலாந்து நாட்டில் கேம்பர்ளி நகரில், முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கி தென்தமிழ் நாட்டின் நீர் வளத்திற்கு வித்திட்ட கர்னல் ஜான் பென்னிகுயிக்கு திருவுருவச் சிலையை அமைச்சர் பெரியசாமி பார்வையிட்டார்.
இங்கிலாந்து நாட்டில் கேம்பர்ளி நகரில், முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கி தென்தமிழ் நாட்டின் நீர் வளத்திற்கு வித்திட்ட கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களுக்குத் திருவுருவச் சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று (செப்.10) தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள சிலையை திறந்து வைப்பதற்காக விரிவான ஏற்பாடுகளுடன் திறப்பு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து மகாராணியார் மறைவை ஒட்டி சிலைத் திறப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இங்கிலாந்து கேம்பர்ளி நகரில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக்கு திருவுருவச் சிலை கேம்பர்ளி நகரில் நிறுவப்பட்ட சிலையை கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் ராமகிருஷ்ணன் கோ.தளபதி, மகாராஜன் மற்றும் கேம்பர்ளி தமிழ் பிரிட்டிஷ் அசோசியேசன் சங்க நிர்வாகிகள் ஆகியோர் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட சிலையினை பார்வையிட்டார்கள்.
இதையும் படிங்க:பீரங்கிகள் முழங்க ராஜாவாக பதவியேற்றார் மூன்றாம் சார்லஸ்..!