தமிழ்நாடு

tamil nadu

மின் வாரிய அலுவலர்களின் அலட்சியம்... பள்ளி மாணவனின் உயிரைப் பறித்த கொடூரம்!

சென்னை: முகலிவாக்கத்தில் 9ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Sep 16, 2019, 11:58 PM IST

Published : Sep 16, 2019, 11:58 PM IST

பள்ளி மாணவனின் உயிரை பறித்த கொடூ

சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் தீனா எம்ஜிஆர் நகரிலுள்ள அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இரவு இருசக்கர வாகனத்தில் நண்பரை அவரது வீட்டில் விட்டபின், திரும்பி வரும் போது வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்துள்ளது.

இதனால் வாகனத்தைத் தள்ளிக் கொண்டு தீனாவும், அவரது நண்பரும் தனம் நகர் வழியாக வந்துள்ளனர். அப்போது சாலையில் பாதாளச் சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்திலிருந்த மின் கம்பியில் தெரியாமல் மிதித்த தீனா, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உறவினர்கள் அப்பகுதி மக்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மாணவனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மாணவன் உயிர் இழப்புக்குக் காரணம் எனக் கூறப்படும் மின் கம்பியில் மின்சாரம் பாயவில்லை என, சென்னை மாநகராட்சி மின்துறை அலுவலர்கள் விளக்கமளித்துள்ளனர். இது அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின் வாரிய அலுவலர்களின் அலட்சியம்.. பள்ளி மாணவனின் உயிரை பறித்த கொடூரம்!

இது குறித்து சென்னை மாநகராட்சி மின்துறை அலுவலர்கள் இடையே கேட்டபோது சென்னை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள தெரு விளக்கிற்குச் செல்லும் மின் கம்பி துண்டிக்கப்பட்டு ஒரு மாதமாவதாகக் கூறினர். மேலும், மாணவன் உயிர் இழப்பிற்கு வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பில் கசிவு ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்ததை மூடி மறைக்கப் பார்ப்பதாகவும், மின் கம்பியில் மின்சாரம் பாயவில்லை எனக் கூறும் அலுவலர்கள், காலையில் அவசர அவசரமாக மின்சாரத்தை வந்து துண்டித்துச் சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர்கள், இது தொடர்பான கண்காணிப்பு படக்கருவி பதிவு உள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட மின் பொறியாளர் மீது மாங்காடு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். எது எப்படியாக இருந்தாலும் ஒரு உயிர் கொடுத்துத் தான் சில மாற்றங்களை உருவாக்கும் வகையில் அரசு அலுவலர்கள் செயல்படுவது வருத்தமளிப்பதாக அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details