தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புழல் சிறையில் போக்சோ கைதி மரணம் - Pokso aquest death in chennai jail

சென்னை: புழல் சிறையில் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்துவந்த கைதி உயிரிழந்தார்.

A Prisoner dies in Puzhal jail in Chennai
A Prisoner dies in Puzhal jail in Chennai

By

Published : Dec 8, 2020, 3:22 PM IST

சென்னை கொண்டித்தோப்பு கெங்கு தெருவைச் சேர்ந்தவர் கிரேன் குமார் (39). வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்களால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவருக்கு 5 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் அவர் 2018ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி முதல் புழல் சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டார். இந்நிலையில் சில நாட்களாக சிறையில் உள்ள மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை வாந்தி எடுத்த நிலையில் சுய நினைவு இல்லாமல் கிடந்துள்ளார்.

உடனே அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புழல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details