டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என திமுக எம்பி-க்கள் ஆர்.எஸ். பாரதி மற்றும் வில்சன் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் சண்முகத்தை சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ். பாரதி பேசுகையில், தமிழ்நாடு தேர்வாணையத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. 90 ஆண்டுகள் நடைபெறாத ஊழல் மோசடி, டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் நடைபெற்றுள்ளது.
ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை, வழக்கை விசாரித்து வரும் 3 அதிகாரிகளை இதுவரை மாற்றியுள்ளனர். மேலும் டிஎன்பிஎஸ்சி விவகாரம் இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இந்த வழக்கை சிபிஐ-யிடம் மாற்றக் கோரி மனு கொடுத்துள்ளோம்.