தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா வைரஸ் பாதிப்பா? - கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஒருவர் அனுமதி - சென்னையில் கொரோனா வைரஸ் அறிகுறியுள்ள நபர்

சென்னை: சீனாவிற்கு சென்றுவிட்டு கடந்த மாதம் தமிழ்நாடு வந்த நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு கரோனா வைரஸின் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

A person with corona virus symptoms in Chennai
சென்னையில் கொரோனா வைரஸ் அறிகுறியுள்ள நபர்

By

Published : Feb 5, 2020, 11:39 AM IST

Updated : Mar 17, 2020, 5:50 PM IST

சென்னை மாடம்பாக்கம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் காசிராஜன் (45). இவர் மாமல்லபுரத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் இரண்டரை வருடமாக கணக்காளராகப் பணிப்புரிந்துவருகிறார்.

இவரது நிறுவனத்துடன் சீன நிறுவனம் ஒன்று வணிக தொடர்பு வைத்துள்ளதால், தொழில் சம்பந்தமாக காசிராஜன் அடிக்கடி சீனாவிற்குச் சென்றுவருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி காசிராஜன் சீனா சென்றுள்ளார். பின்னர் வேலையை முடித்துவிட்டு ஜனவரி 22ஆம் தேதி சென்னைக்கு வந்துள்ளார்.

சீனாவிலிருந்து சென்னை திரும்பிய இவருக்குத் தொடர்ந்து ஒரு வார காலமாக காய்ச்சல், சளி பிரச்னை இருந்துவந்துள்ளது. இதனால் இன்று அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

அப்போது பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவர்கள் இவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு கரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தனி அறையில் வைத்து, காசிராஜனை மருத்துவர்கள் பரிசோதித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:

கரோனா வைரஸ் கண்காணிப்பிலிருந்த 10 பேர் வீடு திரும்பினர்

Last Updated : Mar 17, 2020, 5:50 PM IST

For All Latest Updates

TAGGED:

Corona virus

ABOUT THE AUTHOR

...view details