சென்னை: இன்று (பிப்ரவரி 10) அதிகாலை பாஜக அலுவலகத்திற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். தரையில் பட்டு பெட்ரோல் குண்டு வெடித்ததில் அங்கிருந்த கார்பெட் (தரைவிரிப்பான்) தீப்பிடித்து எரிந்தது. இதனால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
பின்னர், அங்குப் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் மாம்பலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், உயர் அலுவலர்கள் இது குறித்து விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒருவர் நடந்துவந்து பெட்ரோல் குண்டு வீசிச் சென்றது தெரியவந்தது. குண்டுவீச்சு தகவல் அறிந்து ஏராளமான பாஜக தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காட்சியளித்தது.