சென்னை:சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் சிவசண்முகம் (51) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 16ஆம் தேதி சுற்றுலா செல்வதற்காக கொல்கத்தா சென்று உள்ளார்.
பின்னர் கடந்த மாதம் 23ஆம் தேதி வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 34 சவரன் தங்க நகைகள், ஒரு லட்ச ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னர் சிவசண்முகம் இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் காட்சிகளை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர்.