சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகரைச் சேர்ந்தவர் முத்து (50). மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். அப்பகுதியில் கால்வாய் அடைப்பு போன்ற வேலைகளையும் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் (நவ.04) இவரது வீட்டின் அருகிலுள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் ஏராளமான பிளாஸ்டிக் கேன்கள் தேங்கி கிடந்தன. தீபாவளி என்ற காரணத்தினால் பொதுமக்களை கேட்டுக் கொண்டதற்கிணங்க அதை அப்புறப்படுத்துவதற்காக இறங்கினார்.
அப்போது கால்வாயில் விழுந்து சேற்றில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்புத் துறையினர் முத்துவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு பத்தரை மணி வரை தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று (நவ.03) காலை முத்துவின் உடல் கால்வாயில் மிதந்தது.
பின்னர் தீயணைப்புத் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் முத்துவின் மகன் திருநங்கையாக மாறிய அழகி என்பவர், கால்வாய் விவகாரம் தொடர்பாக மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார்.