சென்னை: செண்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதையில் செல்லும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் பணியில் மெட்ரோ ஊழியர் பிரேம்குமார் ஈடுபட்டிருந்தார்.
நேற்று (ஜனவரி 20) காலை ரயிலில் செல்வதற்காக வந்தவரின் உடைமைகளை ஸ்கேனர் மூலமாக சோதனை செய்யும் போது பையில் சந்தேகத்துக்குரிய பொருள் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அவரது பையை திறந்து பார்த்தபோது துப்பாக்கி, 16 ஆயிரத்து 300 ரூபாய் பணம், ஏடிஎம் கார்டுகள், 5 ரயில்வே பணி நியமன ஆணை இருந்ததை கண்டு ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், இதுகுறித்து பெரியமேடு காவல் துறையினருக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் காவலர்கள் அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் கேரளா கோழிக்கோடை சேர்ந்த விஜயன் (60) என்பது தெரியவந்தது. மேலும், அவர் கேரளாவிலிருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை செண்ட்ரல் வந்தடைந்துள்ளார். பின்னர், எழும்பூர் பகுதியில் வேலை தேடி செல்வதற்காக மெட்ரோ ரயில் மூலம் செல்ல இருந்ததும் தெரியவந்தது.
மேலும், கைப்பற்றப்பட்ட துப்பாக்கி டம்மி என தெரியவந்தது. 5-க்கும் மேற்பட்ட போலி ரயில்வே பணி நியமன ஆணை கிடைத்தது எப்படி என விஜயனிடம் பெரியமேடு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:நடிகர் சித்தார்த்துக்குச் சென்னை காவல்துறை சம்மன் - டிஜிபி சங்கர் ஜிவால்