தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது - போக்சோ சட்டம்

சென்னையில், தனது இரண்டாவது கணவர் தன் மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரில், தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டார்.

போக்சோ சட்டம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

By

Published : Dec 2, 2021, 9:19 PM IST

சென்னை: தனது 13 வயது மகளுக்கு, தன் இரண்டாவது கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பெண் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து அந்நபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, குழந்தை நலக்குழு எண்ணிற்கு பாதிக்கப்பட்ட சிறுமி புகாரளித்துள்ளார். அந்தச் சிறுமி, குழந்தை நலக்குழு அலுவலர்களிடம் பேசிய ஆடியோவும் வெளியானது.

இதனையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் தாம்பரத்தில் பதுங்கி இருந்த அந்நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க:அனைத்துப் பாடப் புத்தகங்களிலும் சிறார் உதவி எண்கள் - ஸ்டாலின் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details