சென்னை: கிரீன்வேஸ் சாலை டாக்டர் ராதாகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி (32). தனியார் மருத்துவமனையில் பணியாளராக இருக்கிறார். இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராமு (51) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் செப்.11ஆம் தேதி தனலட்சுமியை அவதூறாக பேசி ராமு வீண் தகராறு செய்துள்ளார். அப்போது, தனலட்சுமியை, ராமு அடித்ததில் தனலட்சுமியின் இரண்டு பற்கள் உடைந்தன. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.