ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இங்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் (35) என்பவர் கண்டெய்னர் லாரியில் ஓட்டுநராகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி ஆனந்தகுமார் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் நிறுவனத்திலிருந்து கார்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இறக்கியுள்ளார்.
பின்னர், இரவு அவர் கண்டெய்னர் லாரியை ஓட்டிக்கொண்டு புழல்-தாம்பரம் புறவழிச் சாலையில் வந்துகொண்டிருந்தார். இவர், அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பம் பகுதியில் லாரியை நிறுத்தி, லாரியின் பக்கவாட்டில் உள்ள கண்டெய்னரில் இரு அடுக்குகளை இயக்கும் ரிமோட்டை சரி பார்த்துள்ளார்.