சென்னை திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் மீனா(44). இவருடைய மகள் தனலட்சுமிக்கு ஆறு மாத கைக்குழந்தையும், மூன்று வயது குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் மீனா, தனலட்சுமி ஆகிய இருவரும் குழந்தைகளுடன் சேர்த்து காவல் ஆணையர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள சிக்னல் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை கவனித்த வேப்பேரி காவல் துறையினர் இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியான வெங்கடேசன்-லட்சுமி ஆகிய இருவரும் சுமார் நான்கு ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். லட்சுமியுடன் மீனா நட்புறவில் இருந்ததால், அவரை நம்பி மீனா தனக்கு தெரிந்த நான்கு பேரையும் சீட்டில் சேர்த்துள்ளார். இதற்கிடையே ஜூலை மாதம் லட்சுமியின் கணவர் வெங்கடேசன் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்.