சென்னை மந்தைவெளி பெரிய பள்ளி தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் தமீம் அன்சாரி (40). இவர் கடந்த மாதம் 20ஆம் தேதி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது வீட்டில் வைத்திருந்த 24 லட்சம் ரூபாய் காணாமல்போனதாகவும், அதனைக் கண்டுபிடித்துத் தருமாறும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பட்டினப்பாக்கம் காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமது (38) பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து ரியாஸ் அகமதுவை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தொழிலதிபர் தமின் அன்சாரியின் மனைவி கஸ்னீமிற்கும் (35) ரியாசுக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் நெருங்கிப் பழகிவந்துள்ளனர்.