சென்னை புரசைவாக்கம் பெருமாள் பேட்டையைச் சேர்ந்தவர் வத்சலா (67). இவர் நேற்று பெரம்பூர் பேரக்ஸ் சாலையைக் கடக்க முயன்றபோது எதிரே வந்த மாநகர பேருந்து வத்சலா மீது மோதியது. இதில் வத்சலாவின் கால் பகுதி, பேருந்தின் சக்கரத்தில் சிக்கி துண்டாகியது. படுகாயமடைந்து மயக்க நிலையிலிருந்த, வத்சலாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மாநகர பேருந்து மோதியதில் பெண்ணுக்கு கால் துண்டிப்பு..! - சென்னை
சென்னை: பெரம்பூர் பேரக்ஸ் சாலையை கடக்க முயன்ற போது, எதிரே வந்த மாநகர பேருந்தொன்று, பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்தியத்தில், அவரின் கால் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி துண்டாகியுள்ளது.
![மாநகர பேருந்து மோதியதில் பெண்ணுக்கு கால் துண்டிப்பு..!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4090641-thumbnail-3x2-accident.jpg)
பெண் ஒருவருக்கு கால் துண்டிப்பு
விபத்தில் சிக்கி காலை இழந்த பெண்: சிசிடிவி காட்சி
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து பேருந்தை இயக்கிய ஓட்டுநர் அரிதாஸை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.