சென்னை:சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் சிவபூதபேடு பகுதியில் செயல்பட்டு வந்த வீட்டு உபயோக பொருட்கள் சேகரித்து வைக்க கூடிய குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஆயில் குடோன், கார் உதிரிபாகங்கள் சேகரிக்கும் குடோன், டைல்ஸ் குடோன் என 5க்கும் மேற்பட்ட குடோனில் தீ பரவியதால் அப்பகுதி முழுவதும் தீ காடாக காட்சியளித்தது.
வானகரம் அருகே உள்ள குடோனில் தீ விபத்து - கோடிக்கணக்கான பொருட்கள் சேதம் இதுகுறித்து தகவல் அறிந்து பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் 5க்கும் மேற்பட்ட குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
இதையும் படிங்க:சாலை ஆக்கிரமிப்பால் மாணவி பலி: நெடுஞ்சாலைத் துறை அதிரடி