தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை மாநகராட்சியில் ஒரேநாளில் ரூ.73,300 அபராதம் வசூல் - Chennai Corporation

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத காரணத்திற்காக சிறப்பு மண்டல அமலாக்க குழுவினர் நடத்திய ஆய்வில் இன்று (ஜூலை 21) ஒரேநாளில் 15 மண்டலங்களில் மொத்தம் 73 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ரிப்பன் மாளிகை
ரிப்பன் மாளிகை

By

Published : Jul 21, 2021, 10:22 PM IST

சென்னை:கரோனா தொற்று பாதிப்பு மாநிலம் முழுவதும் படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 31ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பாக, சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதியில் கூட்டம் கூடுவதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் காவல் துறையினருடன் இணைந்து சிறப்பு அமலாக்க குழு ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத வணிக வளாகங்கள், தனிநபர்களிடமிருந்து தொடர்ச்சியாக அபராதம் வசூலிக்கப்பட்டுவருகிறது.

அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களில் சிறப்பு அமலாக்க குழுவினர் நடத்திய ஆய்வில் மொத்தம் 73 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதிலும், குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 10 ஆயிரத்து 400 ரூபாயும், அம்பத்தூர் மண்டலத்தில் ஒன்பதாயிரம் ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவிஷீல்டு தடுப்பூசி ஆயுள் வரை பாதுகாப்பு தரும் - ஆய்வில் தகவல்

ABOUT THE AUTHOR

...view details