தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெண்கள் கோச்சில் ஏற முயன்றவரை தடுத்த ரயில்வே பெண் காவலருக்கு கத்திக்குத்து... - A mysterious person stabbed a woman guard

சென்னையில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலரை கத்தியால் கழுத்தில் குத்திய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 24, 2022, 10:20 AM IST

சென்னை: நேற்று இரவு 9 மணி அளவில் சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் ரயில் புறப்பட தயாராக இருந்துள்ளது. அங்கு பெண்கள் கோச்சில் பாதுகாப்பு பணியில் ஆர்.பி.எஃப் காவலர் ஆசிர்வா(29) என்பவர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் பெண்கள் கோச்சில் ஏற முற்பட்டுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த ஆசீர்வா இது பெண்கள் கோச் எனவும் இதில் ஏறக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆர்.பி.எஃப் காவலரான ஆசிர்வாவின் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

சென்னை பீச் ஸ்டேஷன்

உடனடியாக ரயில்வே போலீசார் ஆசிர்வாவை மீட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது காயமடைந்த ஆசிர்வா நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், பெண் காவலரை கத்தியால் கழுத்தில் குத்தி தப்பி ஓடிய மர்ம நபரை எழும்பூர் ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே நலத்திட்ட உதவிகளை பெற முடியும்...அமைச்சர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details