தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - HBD ராகுல்

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு
இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு

By

Published : Jun 19, 2021, 6:57 AM IST

Updated : Jun 19, 2021, 7:06 AM IST

ஊரடங்கில் தளர்வுகள்:

ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்கள், உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். போக்குவரத்தை அனுமதிப்பது தொடர்பாக முடிவு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மின்தடை:

தமிழ்நாட்டில் முன்னறிவிப்பு இன்றி மின்தடை ஏற்படுவதை தடுக்க இன்று முதல் 10 நாள்களுக்கு மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

கல்வித் தொலைக்காட்சி:

கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான (2021-2022) பாடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வித் தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் இன்று (ஜூன் 19) தொடங்கிவைக்கிறார்.

கல்வித் தொலைக்காட்சி

அமெரிக்கா செல்லும் ரஜினி:

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார். இன்று அதிகாலை 3.40 மணிக்கு கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா செல்லும் அவர், அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அமெரிக்கா செல்கிறார்.

ரஜினி

HBD ராகுல்:

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்று தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

HBD ராகுல்
Last Updated : Jun 19, 2021, 7:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details