தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - கோவையில் தடுப்பூசி முகாம்

ஜூன் 6, இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

By

Published : Jun 6, 2021, 7:00 AM IST

செம்மொழியான தமிழ்மொழியே..

கடந்த 2004ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி இந்திய அரசால் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. திமுக - காங்கிரஸ் கூட்டணி 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த சில நாள்களிலேயே தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. "திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய மொழியே செம்மொழி" என்று பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்கான இலக்கணத்தை வளர்த்தார்.

உயர்தனிச் செம்மொழி

தடுப்பூசிக்கு உலகளாவிய டெண்டர்

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு மருந்து கொள்முதலுக்கான உலகளாவிய டெண்டர் இன்று இறுதி செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்து துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி கொள்முதல் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

தடுப்பூசி

கொங்கு மண்டலம்:

கோவை நகரில், இன்று 40 இடங்களில், கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது தவணை போடப்படுகிறது.

சேலம் மாநகராட்சி பகுதியில் தொற்று கண்டறியப்பட்ட பகுதியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மழை

மழை.. மழை..

தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டின் மேலும் பல பகுதிகளுக்கு விரிவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

யாஸ் புயல் பாதிப்பு

மேற்கு வங்கத்தில் மத்திய குழு ஆய்வு

மேற்கு வங்கத்தில் யாஸ் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்திய அரசின் 7 பேர் கொண்ட குழுவினர் இன்று கொல்கத்தா செல்கின்றனர். அடுத்த 3 நாள்கள் சேதங்களை மதிப்பிட்ட பிறகு ஜூன் 9ஆம் தேதி அவர்கள் டெல்லி திரும்புகின்றனர். கடந்த 26ஆம் தேதி மேற்கு வங்கம் - ஒடிஸா மாநிலங்களுக்கு இடையில் யாஸ் புயல் கரையை கடந்தது.

ABOUT THE AUTHOR

...view details