திருப்பூரில் ஸ்டாலின் பரப்புரை
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உங்கள் தொகுதியின் ஸ்டாலின் என்ற தலைப்பில் 4ஆம்கட்ட தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் பரப்புரை மேற்கொள்கிறார்.
சென்னையில் மின்தடை
சென்னையில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், தண்டையார்பேட்டை சாத்தாங்காடு, திருமுடிவாக்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
10ஆவது சுற்று பேச்சுவார்த்தை
இந்தியா-சீனா இடையிலான தளபதிகள் மட்டத்திலான 10ஆவது சுற்று பேச்சுவார்த்தை இன்று மோல்டோ என்ற இடத்தில் அமைந்துள்ள சீன தரப்பு அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடைபெற உள்ளது.
இந்தியா-சீனா பேச்சுவார்த்தை நிதி ஆயோக் குழுவின் 6ஆவது கூட்டம்
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் குழுவின் 6ஆவது கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார்.
நோக்கியா 3.4 மாடல்
நோக்கியா நிறுவனத்தின் லேட்டஸ்ட் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக நோக்கியா 3.4 மாடல் இன்றுமுதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொலம்பியாவில் கரோனா தடுப்பூசி
கொலம்பியாவில் இன்றுமுதல் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் இவான் டியூன் தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் கொலம்பியாவில்தான் கரோனாவால் அதிக பலி எண்ணிக்கை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொலம்பியா பிரதமர் இவான் டியூன்