தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த பயணிக்கு முதலுதவி செய்த மத்திய பாதுகாப்பு படை வீரர் ... - Airport medical staff

சென்னை விமானநிலையத்தில் நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த பயணிக்கு மத்திய பாதுகாப்பு படை வீரர் முதலுதவி செய்த வீடியோ சமூகவளைதளங்களில் வைரலாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 26, 2022, 12:25 PM IST

சென்னை:மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூரை சேர்ந்தவர் சேகர் ஹசாரா. இவர் மருத்துவ சிகிச்சைக்காக நேற்று(செப்.25) இரவு சென்னை வந்துள்ளார்.

அப்போது, சென்னை விமான நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதைக் கண்டு விரைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் மயங்கி விழுந்த பயணிக்கு முதலுதவி செய்து, விமான நிலைய மருத்துவ குழுவினரிடம் சேர்த்துள்ளார். பின், அவர்கள் சிகிச்சையளித்து, மேல் சிகிச்சையாக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த பயணிக்கு முதலுதவி செய்த மத்திய பாதுகாப்பு படை வீரர்

மேலும், விமான நிலையத்தில் பயணிகளுக்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டால், அவர்களுக்கு சிபிஆர் வழங்குவதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் பயணிக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் முதல் உதவி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... பேக்கரி ஊழியர் கைது

ABOUT THE AUTHOR

...view details