தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... பேக்கரி ஊழியர் கைது - Appeared in Tiruvallur Court

சென்னையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேக்கரி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 26, 2022, 9:58 AM IST

சென்னை: முகப்பேரை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைபள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த (செப்.16) ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியிலுள்ள பேக்கரி கடைக்கு கூல்ட்ரிங்ஸ் வாங்க சென்ற போது அக்கடை ஊழியரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.

இதனால், பாதிக்கப்பட்ட அச்சிறுமி, பெற்றோரிடம் சொல்லலாமா வேணாமா என்ற மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், பள்ளிக்கு செல்லும் வழியில் பணியில் இருந்த போலீசார் ஒருவரிடம் நடந்ததை கூறி சிறுமி அழுதுள்ளார்.

அப்போது அந்த காவலர் குழந்தைகள் அவசர எண் 1098 என்ற நம்பருக்கு போன் செய்தால் உனக்கு உதவி செய்வார்கள் என கூறி சிறுமியை சமாதானப்படுத்தியுள்ளார். பின்னர் சிறுமி 1098 எண்ணுக்கு தொடர்பு கொண்டு நடந்ததை கூறிய உடன் சம்பவ இடத்திற்கு குழந்தைகள் உதவி கரம் குழுவினர் விரைந்தனர்.

சிறுமியை மீட்டு சிறுமியின் பெற்றோரை வரவழைத்து இது தொடர்பாக திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், பேக்கரியில் வேலை செய்யும் நபர் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மைதான் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையில் போலீசார் பேக்கரிக்கு சென்று கடை ஊழியரிடம் விசாரணை செய்தனர். அப்போது கடை ஊழியர் அந்த சிறுமி யார் என்று தெரியாது என்றும், தான் எந்த தப்பும் செய்ய வில்லை என்றும் மழுப்பியுள்ளார்.

பின், கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமாரக்களை ஆய்வு செய்த போது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து பேக்கரி கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர். அவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ரகு(32) என்றும், பேக்கரி கடையில் வேலை செய்து கொண்டு அங்கேயே தங்கி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர், ரகு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த திருவள்ளூர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:பளு தூக்கும் போட்டியில் தாய்க்கு தங்கப்பதக்கம், மகளுக்கு வெள்ளிப்பதக்கம்...

ABOUT THE AUTHOR

...view details