திருவள்ளூர்:பேரம்பாக்கம் அருகே உள்ள கீழச்சேரி கிராமத்தை சேர்ந்த தம்பதி குணா-முத்தமிழ். கடந்த மாதம் 24 ம் தேதியன்று குணா, அவரின் மனைவி முத்தமிழ் குரூப் 4 தேர்வு எழுதுவதற்காக திருவள்ளூர் அடுத்த கேஜி கண்டிகையில் உள்ள பள்ளிக்கு லூவி டெரினா என்கிற 7 மாத பெண் குழந்தைகளுடன் சென்றுள்ளனர்.
தேர்வு எழுதிவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பும் போது பேரம்பாக்கம் சாலை வளைவில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். அப்போது தாய் முத்தமிழ் தன் மடியில் வைத்திருந்த 7 மாத குழந்தை லூவி டெரினாவை தவற விட்டதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக பேரம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.