தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கருணாநிதியின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை - கலைத் துறை வித்தகர் விருது

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாளையொட்டி, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கருணாநிதி
கருணாநிதி

By

Published : Jun 3, 2022, 12:00 PM IST

Updated : Jun 3, 2022, 1:26 PM IST

சென்னை:மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாள் இன்று (ஜுன் 3) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்ட கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது பெற்ற ஆரூர்தாஸ்

இதையடுத்து சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்.

தமிழறிஞர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு ஆணை

அதோடு சென்னை தலைமைச் செயலகத்தில், "கலைஞர் எழுதுகோல் விருது, கலைத் துறை வித்தகர் விருது மற்றும் தமிழறிஞர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு ஆணைகள் வழங்கினார். மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை தொடங்கி வைத்தார்.

ராயபுரத்தில் 'நகரங்களில் தூய்மை இயக்கம்' தொடங்கம்

இதையும் படிங்க: கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கையெழுத்தை தங்கத்தில் வடிவமைத்த நபர்

Last Updated : Jun 3, 2022, 1:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details