சென்னை:நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதனை விசாரித்த போலீசார், பொயப்புகார் என்பதை உறுதி செய்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனை எதிர்த்து வசந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் மறுவிசாரணை நடத்த உத்தவிட்டது. ஆனால், இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் முடித்து அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த முறை வசந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிபதி வேல்முருகன், காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாக, திறமையற்றவர்களாக உள்ளனர்.
10% அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாக, திறமையானவர்களாக உள்ளனர். ஊழல் அதிகாரிகளை களைந்து, திறமையற்றவர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டார். இந்த கருத்துக்களை நீக்கக்கோரி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.