தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - 9 PM Top 10 news

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்தி சுருக்கம்....

இரவு 9 மணி
இரவு 9 மணி

By

Published : Oct 10, 2021, 8:58 PM IST

1. லக்கிம்பூர் விவகாரம்: குடியரசுத் தலைவரிடம் நேரம் ஒதுக்கக்கோரி காங்கிரஸ் கடிதம்

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ள விரிவான உண்மை விளக்கும் அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக அக்கட்சி குடியரசுத் தலைவரிடம் நேரம் ஒதுக்கக்கோரி கடிதம் எழுதியுள்ளது.

2. IPL 2021 QUALIFIER 1: டாஸ் வென்றார் தோனி; டெல்லி பேட்டிங்

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.

3. 'அதிமுகவில் சில மாற்றங்கள் செய்வது அவசியம்' - செல்லூர் ராஜூ

அதிமுகவில் சில மாற்றங்கள் செய்து, கட்சியை வளர்க்க வேண்டியது அவசியமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

4. ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம்; முதலமைச்சர் ஆய்வு!

தமிழ்நாடு முழுவதும் இன்று ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதையடுத்து, சென்னை சின்னமலையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

5.'தூய்மை கரூர்' திட்டப்பணி ஆய்வு; அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி!

கரூர் நகராட்சியை மேம்படுத்தத் தொடங்கப்பட்ட 'தூய்மை கரூர்' திட்டப்பணிகளை, அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்தார்.

6. தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை;பொதுமக்கள் அதிர்ச்சி!

கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக ரூ.30-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, ரூ.65 வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

7. ஆன்லைன் ரம்மியால் நேர்ந்த விபரீதம்!

வாணியம்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாடக்கூடாது என்று பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

8. சசிகலா மீண்டும் அரசியல் பயணம்... சேலத்தில் சின்னம்மா பேரவைக் கூட்டம்... பரபரக்கும் அரசியல் களம்

சசிகலா விரைவில் அரசியல் வரவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட 'தமிழக தியாக தலைவி சின்னம்மா பேரவையின்' முதல் ஆலோசனைக் கூட்டம் சேலம், ஓமலூர் அடுத்துள்ள பண்ணப்பட்டி பகுதியில் நடைபெற்றது.

9. அடுத்த 3 மாதங்கள் மிக கவனம் தேவை - எச்சரித்த ராதாகிருஷ்ணன்

டெங்கு காய்ச்சலால் தமிழ்நாட்டில் 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்; அடுத்த மூன்று மாதங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

10. பிரதமர் நரேந்திர மோடி மாபெரும் ஜனநாயகத் தலைவர்- அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி மாபெரும் ஜனநாயகத் தலைவர் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details