கரோனா வைரஸ் பரவாமல் காரணமாக, ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சில விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதனை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
147 நாள்களில் 9.76 லட்சம் பேர் கைது - ரூ. 20.79 கோடி அபராதம்! - Rs. 20.79 crore fine for curfew violation
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இதுவரை 147 நாள்கள் ஊரடங்கில் விதிமுறைகளை மீறியதாக 9 லட்சத்து 76 ஆயிரத்து 18 பேர் கைது செய்யப்பட்டு, அபராதமாக 20 கோடியே 79 லட்சத்து 99 ஆயிரத்து 823 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.
curfew-violation-in-tamilnadu
அதன்படி கடந்த 147 நாள்களில் விதிமுறைகளை மீறியதாக 9 லட்சத்து 76 ஆயிரத்து 18 பேர் கைது செய்யப்பட்டு, அபராதமாக 20 கோடியே 79 லட்சத்து 99 ஆயிரத்து 823 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 6 லட்சத்து 86 ஆயிரத்து 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:ஊரடங்கு விதிமீறல் : 6.85 லட்சம் வாகனங்களை பறிமுதல் செய்த காவல் துறையினர்!