இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்துவருகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக் கல்வித் துறையினர் குறித்த நேரத்தில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் முன்கூட்டியே திட்டமிட்டு புத்தகங்கள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
ஒன்பது கோடி புத்தகங்கள் தயார்: வளர்மதி - books
சென்னை: ஒன்பது கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவர் வளர்மதி கூறியுள்ளார்.
valarmathi
அதேபோல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டுவருகின்றன. மேலும் ஆன்லைன் மூலமும் தங்களை பதிவு செய்து புத்தகங்களை பெறும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒன்பது கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்றார்.