தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் 866 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்; 218 தெருக்களில் 10க்கும் மேற்பட்டோர் பாதிப்பு! - பிரகாஷ்

சென்னை: சென்னையில் 866 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன என்றும், 218 தெருக்களில் பத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

containment zone
containment zone

By

Published : Apr 23, 2021, 8:54 PM IST

சென்னை மாநகரில் கரோனா தொற்றுப் பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளித்தல், மக்களுக்கு முகக்கவசம் வழங்குதல், மருத்துவ முகாம்கள் அமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.

கடந்த முறை ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால் கூட, தெரு முழுவதும் அடைக்கப்பட்டு மாநகராட்சியால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது ஒரு தெருவில் மூன்று முதல் ஐந்து வீடுகளில் தொற்று இருந்தால் மட்டுமே அதனை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்து வருகிறது.

அதன்படி, தற்போது சென்னையில் 866 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. 648 தெருக்களில் ஆறுக்கும் மேற்பட்டோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 218 தெருக்களில் பத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details