சென்னை:மறைந்த தமிழ்நாடுமுதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் சகோதரர் என கூறி, கர்நாடகா மைசூருவில் உள்ள வியாசராபுரத்தை சேர்ந்த வாசுதேவன் (83) என்பவர் தாக்கல் சென்னை உயர் நீதிமன்றித்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "ஜெயலலிதாவின் தந்தையான ஆர்.ஜெயராம்தான், தனக்கும் தந்தை. ஜெயராமின் முதல் மனைவி ஜெ.ஜெயம்மா. அவர்களின் ஒரே வாரிசு நான் மட்டுமே.
தந்தை ஜெயராம் இரண்டாவதாக வேதவல்லி என்கிற வேதம்மாவை திருமணம் செய்து கொண்டதன் மூலம்தான், ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் பிறந்தனர். அந்த வகையில் ஜெயலலிதா, ஜெயக்குமார் ஆகியோர் எனது சகோதர, சகோதரி.
1950ஆம் ஆண்டில் ஜீவனாம்சம் கேட்டு மைசூரு நீதிமன்றத்தில் எனது தாய் ஜெயம்மா வழக்கு தொடர்ந்தபோது, அந்த வழக்கில் தந்தையின் இரண்டாவது மனைவி வேதவல்லி, ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு இருந்தனர். பின்னர், இந்த வழக்கு சமரசத்தில் முடிந்துவிட்டது.