சென்னை:சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் 74 ஆவது சுதந்திரதின விழா சிறப்பான உற்சாகத்துடன் நடைபெற்றது.
கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலாளர் சண்முகம் வரவேற்று முப்படை தளபதிகளை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். பின்பு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்பு கோட்டை கொத்தளத்திலுள்ள தேசியக் கொடியை ஏற்றி மரியாதைச் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர், பல்வேறுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார். விருது பெற்றவர்கள் குறித்து விவரங்ளை கீழே காணலாம்.
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை டாக்டர் அ.ப.ஜெ அப்துல்கலாம் விருது
- ச செல்வகுமார் (நிறுவனர் ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை)
கல்பனா சாவ்லா விருது
- செந்தமிழ் செல்வி - பெரம்பலூர் மாவட்டடம்
- முத்தம்மாள் - பெரம்பலூர் மாவட்டம்
- ஆனந்த வள்ளி - பெரம்பலூர் மாவட்டம்
கோவிட் 19க்கான முதலமைச்சர் சிறப்பு விருது
- மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் - முதன்மை ஆராய்ச்சியாளர் (உலக சுகாதார நிறுவனம், ஜெனீவா)
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு விருதுகள்
- சிறந்த தொண்டு நிறுவனம் - சி.எஸ்.ஐ காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர், சென்னை.
- சிறந்த மருத்துவர் - மருத்துவர் க. சியாமளா, சேலம்
- மாற்றுத்திறனாளிக்கு அதிக அளவில் வாய்ப்பு அளித்த சிறந்த தனியார் நிறுவனம் - சக்தி மசாலா பிரைவேட் லிமிடெட் ஈரோடு
- சிறந்த சமூகப் பணியாளர் - கி. சாந்தகுமார், திருச்சி
- சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி - சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட், சேலம்.
மகளிர் நலனுக்காக சிறப்பாகத் தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள்
- ஜி.பி கோதணவள்ளி, கோயம்புத்தூர் மாவட்டம்.
- முனைவர் வி. நடனசபாபதி கிராமப்புற கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு மையம் (கீரிடு)கடலூர் மாவட்டம்.
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதலமைச்சர் விருதுகள்
- சிறந்த மாநகராட்சி - வேலூர்
- சிறந்த நகராட்சி - முதல் பரிசு விழுப்புரம் | இரண்டாம் பரிசு கரூர் | மூன்றாம் பரிசு கூத்தநல்லூர்
சிறப்பாக பணியாற்றியோருக்கான விருதுகளை வழங்கும் முதலமைச்சர்
சிறந்த பேரூராட்சிகள்
- முதல் பரிசு வனவாசி சேலம் மாவட்டம்
- இரண்டாம் பரிசு வீரபாண்டி தேனி மாவட்டம்
- மூன்றாம் பரிசு மதுக்கரை கோயம்புத்தூர் மாவட்டம்
சிறப்பாக பணியாற்றியோருக்கான விருதுகளை வழங்கும் முதலமைச்சர்
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள்
- எஸ். அருண்குமார், மதுரை மாவட்டம்
- ஆர். ராம்குமார், கடலூர் மாவட்டம்
- எஸ். அம்பேத்கர், சென்னை
பெண்கள் பிரிவு
- மு.புவனேஸ்வரி, கடலூர் மாவட்டம்
சிறப்பாக பணியாற்றியோருக்கான விருதுகளை வழங்கும் முதலமைச்சர்
கோவிட்-19 தடுப்பு பணிக்கான சிறப்பு பதக்கம்
- மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை
- மருத்துவர் ராஜேந்திரன் அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை சென்னை.
- மருத்துவர் உமாமகேஸ்வரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விருதுநகர்
- சித்த மருத்துவர் சதீஷ்குமார், அரசு சித்தா மருத்துவமனை அரும்பாக்கம் சென்னை
- என். ராமுத்தாய் செவிலியர் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி சென்னை
- கிரேஸ் எமைமா செவிலியர் அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை சென்னை
- ஆதிலட்சுமி செவிலியர் கண்காணிப்பாளர் ஈஎஸ்ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை கோயம்புத்தூர்
- முனைவர் எஸ் ராஜூ துணை இயக்குனர் மாநில சுகாதார ஆய்வகம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகம்
- முத்துக்குமார் சுகாதார ஆய்வாளர் கோயம்புத்தூர் சுகாதார பகுதி மாவட்டம்
- ஜீவராஜ் ஆய்வக நுட்புநர் பழனி சுகாதார பகுதி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம்
சிறப்பாக பணியாற்றியோருக்கான விருதுகளை வழங்கும் முதலமைச்சர்
காவல் துறை
- எஸ். சையித் அப்தாகீர் காவலர் 1739, மணப்பாறை காவல் நிலையம் திருச்சி
- டி. நரசிம்மஜோதி காவல் உதவியாளர், அனந்தபுரம் காவல் நிலையம் விழுப்புரம்
- இ. ராஜேஸ்வரி, சென்னை பெருநகர மகளிர் காவல் ஆய்வாளர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையம் சென்னை
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி
- ஐ. துரை ராபின் தீயணைப்பு ஒட்டி 8257 நாகர்கோவில் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம் கன்னியாகுமரி
- எஸ். பழனிசாமி தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர் 7549, துறையூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம் பெரம்பலூர்
- எஸ். கருணாநிதி முன்னணி தீயணைப்போர் 7388, மணலி தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம் சென்னை
சிறப்பாக பணியாற்றியோருக்கான விருதுகளை வழங்கும் முதலமைச்சர்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
- எஸ். ரகுபதி துப்பரவு ஆய்வாளர், மாமல்லபுரம் பேரூராட்சி செங்கல்பட்டு மாவட்டம்
- பி. பாண்டிச்செல்வம், துப்பரவு ஆய்வாளர் கொடைக்கானல் நகராட்சி
- எஸ் கலையரசன்உதவி பொறியாளர் பிரவுவு 102 மண்டலம்-8 சென்னை பெருநகர மாநகராட்சி
- எம். ஏசுதாஸ் தூய்மைப் பணியாளர் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி திருவள்ளூர் மாவட்டம்
- ஈ. ஜெய்சங்கர் தூய்மைப் பணியாளர் சென்னை பெருநகர மாநகராட்சி
- மா. சங்கர் தூய்மைப் பணியாளர் ஈரோடு மாநகராட்சி
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
- எஸ். ஜெயசித்ரா வட்டாட்சியர் காஞ்சிபுரம் மாவட்டம்
- கே. ஜெயந்தி மண்டல துணை வட்டாட்சியர் சேலம் மாவட்டம்
- து. பிரித்விராஜ் கிராம நிர்வாக அலுவலர் விருதுநகர் மாவட்டம்
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
- ஆர். தியாகமூர்த்தி பட்டியல் இனத்தவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சென்னை தெற்கு மண்டலம் அடையாறு சென்னை
- பி. ரமாமணி பட்டியல் எழுத்தர் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் அலுவலகம் சென்னை.
- டி. தமிழ்செல்வன் பட்டியல் எழுத்தர் விப்பேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டம்.
விருது பெற்றவர்களுடன் எடுக்கப்பட்ட குழு புகைப்படம்
விருது வழங்கும் நிகழ்வையடுத்து முதலமைச்சர் பழனிசாமியுடன் அனைத்து விருதாளர்களும் குழு புகைப்படம் எடுத்துகொண்டனர்.