தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

71 மாணவர்களுக்கு கரோனா: சென்னை ஐஐடி மூடல்! - கரோனா பரல்

சென்னை: சென்னை ஐஐடியில் அதிகளவில் 71 மாணவர்களுக்கு கரோனா தொற்று பரவியது கண்டறியப்பட்டதால் ஐஐடி வளாகம் மூடப்பட்டது. மறு உத்தரவு வரும்வரை மாணவர்கள் பேராசிரியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

covid
covid

By

Published : Dec 14, 2020, 9:34 AM IST

சென்னை ஐஐடி வளாகத்தில் 71 மாணவர்களுக்கு கரோனா பரவியுள்ளது. அதனைத் தொடர்ந்து வளாகத்தில் இருக்கும் நூலகம் வகுப்பறைகள் காலவரையின்றி மூடப்படுவதாக சென்னை ஐஐடி நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் சென்னை ஐஐடி நிர்வாகம் மாணவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “விடுதிகளில் தங்கியிருக்கக்கூடிய மாணவர்கள் விடுதிகளிலிருந்து வெளியே வர வேண்டாம். விடுதி அறைகளிலேயே மாணவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கரோனா பரவியதால் சென்னை ஐஐடி மூடல்
மாணவர்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்தால் ஐஐடி வளாகத்தில் இருக்கும் மருத்துவ மையத்தை உடனடியாக அணுக வேண்டும்.
சென்னை ஐஐடி வளாகத்தில் கரோனோ பரவியதைத் தொடர்ந்து மறு உத்தரவு வரும்வரை பேராசிரியர்கள் மாணவர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்” என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் கரோனா தொற்று பரவியது முதல் மிகுந்த கட்டுப்பாடு உடனேயே வளாகத்திற்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பேராசிரியர்களும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நோய்த்தொற்று பரவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details