சென்னை: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் தாம்பரம் மாநகராட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தாம்பரம் மாநகராட்சி மாமன்றத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்களான திமுக - 48, அதிமுக - 8, சுயேச்சை - 7, காங்கிரஸ் - 2, மதிமுக - 1, மமக - 1, தமிழ் மாநில காங்கிரஸ் - 1, சிபிஎம் - 1, விசிக - 1 ஆகியோர் என 70 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவி ஏற்றுக்கொண்ட மாமன்ற உறுப்பினர்கள் அவரவர் கட்சித் தலைவர்களின் பெயர்களைக் கூறி பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு சிறு குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, அப்துல் சமது, மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சென்னைக்கு இணையான தாம்பரம்
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறுகையில், 'திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்கின் அடிப்படையில் தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. பரங்கிமலை ஊராட்சியை விரைவில் தாம்பரம் மாநகராட்சியில் இணைத்து சென்னைக்கு அடுத்தபடியான மாநகராட்சியாக உருவாக்குவோம்.