சென்னை:கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், கோவிந்தராஜன், மணிவண்ணன், முகமது சௌகத் அலி, அருள் சாரங்கபாணி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பழகன் ஆகிய 7 பேர் சூடான் நாட்டிற்கு வேலைக்காக சென்றனர். ஆனால், அங்கு வேலை இழந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்துவந்தனர்.
சூடானில் சிக்கித் தவித்த 7 தமிழர்கள் தாயகம் திரும்பினர் - 7 Tamilians in sudan
சூடான் நாட்டில் வேலை இழந்து சிக்கித் தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
![சூடானில் சிக்கித் தவித்த 7 தமிழர்கள் தாயகம் திரும்பினர் 7 Tamils stranded in Sudan were returned the state](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15065495-thumbnail-3x2-l.jpg)
7 Tamils stranded in Sudan were returned the state
இதனிடையே அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, அவர்களது குடும்பத்தினர் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு, இந்திய தூதர உதவியுடன் 7 பேரையும் மீட்டு சென்னை விமான நிலையம் கொண்டுவந்தது. அவர்களை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை துணை இயக்குநர் ரமேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் வரவேற்றனர். இதையடுத்து அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மேற்கு ஆப்பிரிக்காவில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்!