தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்...

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Aug 3, 2021, 6:58 PM IST

1.ஆந்திராவில் பழங்கால தமிழ் கல்வெட்டு கண்டெடுப்பு!

ஆந்திராவில் 710 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

2.திறந்தநிலைப் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு அரசுப்பணிக்கு செல்லுபடியாகும் - துணைவேந்தர் பார்த்தசாரதி

அரசாணை 242இன் படி 10, 12ஆம் வகுப்புகளுக்குப் பிறகு, தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் பயின்ற இளங்கலை பட்டப்படிப்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நியமனத்திற்குச் செல்லுபடியாகும் எனத் துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

3.சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின!

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வெளியானது. இதில் சென்னை மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

4.கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணித்துள்ளது - துரைமுருகன்

கருணாநிதி படத்திறப்பு விழாவில் உரிய மரியாதை தரப்படும் என உறுதியளித்தும் அதிமுக புறக்கணித்துள்ளது என நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

5.'261 இடங்களில் நடத்திய ஆய்வில் ரூ. 1.43 கோடி அபராதமாக வசூல்' - அமைச்சர் மூர்த்தி

வணிக வரித்துறையின் நுண்ணறிவு பிரிவின் தகவலின்படி 261 இடங்களில் ஆய்வு செய்ததில் 1.43 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்

6.சிவசங்கர் பாபா ஜாமீன் கோரி மனு - சிபிசிஐடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு குறித்து சிபிசிஐடி பதிலளிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7.கனமழையால் கங்கையில் உயர்ந்த நீர் மட்டம்...

பிகாரில் கனமழை பெய்து வருவதால் கங்கையில் நீர் மட்டம் உயர்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

8.தஜிந்தர்பால் சிங் தூர் வெறியேற்றம்; தடகளத்தில் தொடரும் ஏமாற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் குண்டெறிதலில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தூர் 13ஆவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதிபெறாமல் வெளியேறினார்.

9.சமூக வலைதளத்தில் 'வலிமை'யான சாதனை படைக்கும் 'நாங்க வேற மாறி'!

சென்னை: அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'நாங்க வேற மாறி' பாடல் சமூக வலைதளத்தில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

10.’அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்: விரைவில் வெளியாகும் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

பவன் கல்யாண், ராணா டகுபதி நடிப்பில் உருவாகிவரும் ’அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details