தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாவட்டக் கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு பதவி உயர்வு! - பிரதீப் யாதவ்

சென்னை: பல்வேறு மாவட்டங்களின் கல்வி அலுவலர்களாக பணியாற்றிவந்த ஏழு பேருக்கு பதவி உயர்வு வழங்கி பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.

pradeep yadav

By

Published : Jun 11, 2019, 6:08 PM IST

இது குறித்து பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், 'சீர்காழி மாவட்டக் கல்வி அலுவலர் தியாகராஜன் திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் குணசேகரன் நாகப்பட்டினம் முதன்மைக் கல்வி அலுவலராகவும், வத்தலகுண்டு மாவட்டக் கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் கரூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், தேனி மாவட்டக் கல்வி அலுவலர் பி.என். கணேஷ் திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலராகவும், சென்னை மேற்கு மாவட்டக் கல்வி அலுவலர் பி.எ. ஆறுமுகம் கடலூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், உளுந்தூர்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் ரத்தினச்செல்வி தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம்; ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலராகவும், அரூர் மாவட்டக் கல்வி அலுவலர் சுப்பிரமணி தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.













ABOUT THE AUTHOR

...view details