சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி (Chennai Corporation) மூலம் 5270.36 கி.மீட்டர் நீளமுடைய 34,640 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவற்றில் 3932.13 கிமீ நீளமுடைய 23.221 எண்ணிக்கையிலான தார் சாலைகளும் 1270.83 கிமீ நீளமுடைய 11039 எண்ணிக்கையிலான சிமெண்ட் கான்கிரீட் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு திட்டங்களில் மேம்படுத்தல்
சென்னை மாநகராட்சி சாலைகள் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் (TURIP) சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் (CMCDM) மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
சாலைகள் சேதம்
குடிநீர், கழிவுநீர், மின்சார இணைப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிக்காகவும் சாலைகள் அவ்வப்போது பல இடங்களில் பள்ளம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உட்புற சாலைகளில் வேகத்தடை அமைப்பது, மங்கிபோன தெர்மோபிளாஸ்டிக் கோடுகள் புதுப்பித்தல், வழிகாட்டு பலகைகள் (Sign Boards) அமைப்பது போன்ற போக்குவரத்து அபிவிருத்தி பணிகள் தேவைக்கேற்ப அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது.