தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 692 பேருக்கு கரோனா - தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 692 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 692 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

covid
covid

By

Published : Jun 19, 2022, 9:19 PM IST

Updated : Jun 19, 2022, 10:34 PM IST

சென்னை: இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று புதிதாக 19 ஆயிரத்து 415 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில், அமெரிக்காவிலிருந்து வந்த நான்கு நபர்கள், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவர், பங்களாதேஷில் இருந்து வந்த ஒருவர் உட்பட மேலும் 692 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 57 லட்சத்து 11 ஆயிரத்து 910 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் 34 லட்சத்து 60 ஆயிரத்து 874 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மட்டும் தனிமைப்படுத்தும் மையங்களில் 3 ஆயிரத்து 522 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 306 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 121 நபர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 43 நபர்களுக்கும், கன்னியாகுமரியில் 32 நபர்களுக்கும், திருவள்ளூரில் 48 நபர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாளை முதல் 12ஆம் வகுப்புகள் தொடக்கம்

Last Updated : Jun 19, 2022, 10:34 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details