தமிழ்நாடு சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், துணை நிதிநிலை சட்ட மசோதாவை தாக்கல் செய்து பேசியதாவது,
"பலத்துறைக்கு 6,408 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொள்ள 231 கோடியே 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைநிலை கல்வி மேம்பாட்டு திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க 123 கோடி ரூபாய் ஒதுக்கீடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடலோர பேரிடர் ஆபத்துக் குறைப்புத் திட்டத்தின் கீழ் நெகிழ்திறன் சூறாவளி மின் வலையமைப்புகளை நிறுவுவதற்காக 113 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும், அரசு கட்டடங்களை பழுதுபார்த்து சீரமைக்க 193 கோடி ரூபாய் ஒதுக்கீடும், பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் கொள்முதல் செய்வதற்காக 166 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளன.