தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் 600 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது - 600 kg Gutka seized in Chennai: 3 arrested

சென்னை: செம்மஞ்சேரி பகுதியில் சரக்கு வேனில் குட்கா புகையிலைப் பொருள்களை கடத்திவந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு 600 கிலோ குட்கா பறிமுதல்செய்யப்பட்டது.

குட்கா
குட்கா

By

Published : May 2, 2021, 9:19 AM IST

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை செம்மஞ்சேரி அருகே போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக அடையாறு துணை ஆணையர் விக்ரமன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய கிடைத்தது.

அதன் அடிப்படையில் செம்மஞ்சேரி தனியார் கல்லூரி அருகில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு வேனை (Tata Ace) நிறுத்தி விசாரணை செய்தனர்.

அப்போது, வேனில் வந்த மூன்று நபர்களும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர்.

சந்தேகத்தின்பேரில் வேனை சோதனை செய்தபோது, அதில் தக்காளி பெட்டிகளுக்கு அடியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

குட்கா புகையிலை பாக்கெட்டுகளை கடத்திவந்த திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த அன்பரசு (31), சிவலிங்கம் (47), நாவலூரைச் சேர்ந்த பழனி (37), ஆகிய மூன்று பேரை காாவல் துறையினர் கைதுசெய்தனர்.

அவர்களிடமிருந்து வேனில் கடத்திவரப்பட்ட 600 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், விமல் உள்ளிட்ட குட்கா புகையிலைப் பொருள்களை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

பின்னர் கைதுசெய்யப்பட்ட மூன்று நபர்களும் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details