சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில் இதுவரை 38 லட்சத்து 72 ஆயிரத்து 322 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
51 பார்சல்கள்
சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில் இதுவரை 38 லட்சத்து 72 ஆயிரத்து 322 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
51 பார்சல்கள்
இந்நிலையில், புனேவில் இருந்து விமானம் மூலம் 51 பார்சல்களில் 6 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சனிக்கிழமை சென்னை வந்தன.
இதனை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு, குளிர்சாதன வாகனம் மூலம், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.
மாநில சுகாதாரத்துறை அலுவலர்கள், “இந்தத் தடுப்பூசிகள், பற்றாக்குறை ஏற்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 90% ஆசிரியர்கள்!